fbpx

மாணவர்களே கவனம்…! இன்று முதல் ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்…! வெளியான புதிய அறிவிப்பு…!

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA தேர்வு மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

எம் .இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.750, இதர பிரிவினர் ரூ.1,500 செலுத்த அறிவுறுத்தப்பட்டனர். கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மாணவர்கள் கட்டணங்களை செலுத்தியிருந்தனர். நுழைவுத்தேர்வு எழுத பிப்ரவரி 28-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இறுதி ஆண்டில் இறுதிப்பருவத்தேர்வு எழுதும் 2022-23ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள் முதுகலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண் யார் தெரியுமா?... சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பெண் பணக்காரர்கள் பட்டியல்!

Sat Mar 11 , 2023
உலகில் அதிக பெண் பணக்காரர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகிலேயே பெண் பணக்காரர்கள் அதிகம் இருக்கும் நாடுகள் குறித்த பட்டியல் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பெண் பணக்காரர்கள் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சாவித்திரி திண்டல் 17.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியாக உள்ளார் […]

You May Like