10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, ஹால் டிக்கெட்டை இன்று காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவர்களுக்கான அறிவியல் பாடச் செய்முறைத்தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் படித்த மாணவர்கள் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தை எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.