fbpx

Hall Ticket | பிளஸ்2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?

12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

Hall Ticket | 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் ஹால் டிக்கெட்களை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று முதல் https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், நேற்று (பிப்.19) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Read More : https://1newsnation.com/sonia-gandhi-sonia-gandhi-became-rajya-sabha-mp-for-the-first-time-official-announcement-released/

Chella

Next Post

30 வருடம் கழித்து கிடைத்த நீதி.! பாலியல் தொழிலாளியை 140 முறை குத்தி கொலை செய்த வழக்கில் புதிய திருப்பம்.!

Tue Feb 20 , 2024
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில், பாலியல் தொழிலாளியை 140 முறை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், 30 ஆண்டுகள் கழித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த படேல் என்பவர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொலம்பியாவை சேர்ந்த மெரினா கொப்பல் என்ற பெண் மசாஜ் செய்பவராகவும், சில நேரங்களில் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். 1994ஆம் ஆண்டு அவர் […]

You May Like