இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று வெளியிட்டது. நீட் தேர்வு மே 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
* தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: https://nta.ac.in/
* “NEET UG 2024 அட்மிட் கார்டு”க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.
* உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
* எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
* ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இருக்கும்.
Read More : EMIஇல் பொருட்கள் வாங்கும் முன் இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!