நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றிற்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.