fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி..?

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த ஹால் டிக்கெட்டை http://tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 – இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 (முற்பகல்) வரை நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்வு சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும். தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

ரூ.12.50 கோடி மதிப்புள்ள சுமார் 20.5 கிலோ தங்கம் பறிமுதல்...! புலனாய்வு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...!

Thu Aug 3 , 2023
சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெவ்வேறு 3 நடவடிக்கைகளில் ரூ. 12.50 கோடி மதிப்புள்ள சுமார் 20.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது. இலங்கையிலிருந்து ராமநாதபுரத்தின் வடக்குக் கடற்கரையான தங்கச்சிமடம் வழியாக வெளிநாட்டு தங்கம் மீன்பிடிப் படகில் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள், தங்கச்சிமடத்தின் வடக்குக் கடற்கரை அருகே 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய […]

You May Like