fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! டவுன்லோடு செய்வது எப்படி..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் ஆண்டின் மே மாதம் 21ஆம் தேதியன்று, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வு எழுதிய 9,94,890 பேரில், 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு தான், தற்போது நடைபெற உள்ளது. குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5,413 இடங்களுக்கும் தேர்வு நடைபெறவுள்ளது.

முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தனியாக தரவரிசை பட்டியலும், நேர்முகத்தேர்வு அல்லாத பகுதிகளுக்கு தனியாக தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அதனடிப்படையில், துறைவாரியாக காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யபட்டவர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இந்நிலையில், முதன்மை தேர்வெழுதும் தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவின் விவரம் கொண்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில், https://apply.tnpscexams.in/public/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

<

Chella

Next Post

’அந்த ஆண்ட்டியை பாத்த உடனே முடிவு பண்ணிட்டேன்’..!! ’எப்படியாவது’...!! பக்கத்துவீட்டு இளைஞர் பகீர் வாக்குமூலம்..!!

Thu Feb 16 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில், கிடந்துள்ளார். கணவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி சுயநினைவு இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. […]

You May Like