fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் ஏ தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தோ்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாகவுள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா் என 48 துறைகளில் 1,820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு தமிழக முழுவதுதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

அதன்படி, முதல்நிலை எழுத்துத் தோ்வானது செப்.14ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பில் க்ளிக் செய்து, போதிய விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

Read More : ’என் அப்பா பெயரை சொல்லி யாரும் அழைக்காதீங்க’..!! ’அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது’..!! பரபரப்பை கிளப்பிய மாரியப்பனின் பேட்டி..!!

English Summary

The hall ticket for TNPSC Group 2 Prelims has been released today.

Chella

Next Post

என் தந்தை தோனியை திட்டியது ஏன்..? யுவராஜ் சிங் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

Wed Sep 4 , 2024
The issue of Indian cricket star Mahendra Singh Dhoni's harsh criticism of Yuvraj Singh's father had caused a lot of controversy.

You May Like