fbpx

நோட்…! TRB தேர்வுக்கு வெளியானது Hall Ticket…! உடனே பதிவிறக்கம் செய்ய வேண்டும்..‌!

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தனது செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2019-2020 to 2021-2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீடு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

Vignesh

Next Post

வரி செலுத்துவோர் கவனத்திற்கு...! புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு...!

Sun Aug 27 , 2023
வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான www.incometaxindia.gov.in என்ற தளத்தை மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது. இந்த வலைத்தளம் வரி மற்றும் வரி தொடர்பான பிற தகவல்களின் விரிவான தகவல்களுடன் செயல்படுகிறது. இது நேரடி வரிச் சட்டங்கள், […]

You May Like