fbpx

தண்ணீர் குழாய்களை ராக்கெட் ஏவும் ஆயுதமாக மாற்றும் ஹமாஸ் அமைப்பு..!! பக்கா ஸ்கெட்ச்..!! அதிர்ச்சி வீடியோ..!!

ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால், ஐநா சபை 1947இல் பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர்.

பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போது வரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய தற்போதைய தாக்குதலை அடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்து வரும் போரில் தங்கள் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், ஹமாஸ் படையினர் தண்ணீர் குழாய்களை பயன்படுத்தி ராக்கெட்டுகளை ஏவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக ஹமாஸ் படை வீரர்கள் நிலத்துக்கு அடியில் உள்ள குழாய்களை தோண்டி எடுத்து அதை ராக்கெட் ஏவும் ஆயுதமாக மாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Chella

Next Post

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்ககம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து...!

Sat Oct 14 , 2023
ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் பயன்பாட்டை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், புதுதில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநரகம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறையின் புவி அறிவியல் பள்ளி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் குறித்த ஆராய்ச்சிக்கான அதிநவீன பணியகத்தைத் தொடங்கியுள்ளன மத்திய அரசின் தமிழ்நாடு […]

You May Like