fbpx

’புத்தக பைகளை சுமந்த கைகள் பொட்டலங்களை சுமக்கிறது’..! முக்கிய வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் போற்றி வளர்க்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் நிலவும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி அறிக்கை வாயிலாகவும், தங்கள் ட்விட்டர் பக்கங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் வன்முறை சம்பவம் அரங்கேறியதற்கும், சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் செயல்படாததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், குறிப்பாக திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

’புத்தக பைகளை சுமந்த கைகள் பொட்டலங்களை சுமக்கிறது’..! முக்கிய வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

இந்நிலையில், தமிழ்நாட்டின் பாதை போதை ஆகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”புத்தக பைகளை சுமந்த கைகள் தற்போது பொட்டலங்களை சுமக்கிறது என சாடியுள்ளார். கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது என்றும் போதைக் கலாச்சாரம் போற்றி வளர்க்கிறது” என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் போதையால் நிகழ்ந்த சம்பவங்களின் வீடியோ காட்சி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

மதுரையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..! கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல்..!

Fri Jul 22 , 2022
மதுரை தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னை வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து […]
மதுரையில் 3-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..! கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல்..!

You May Like