தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இவர் இருந்து வருகிறார். வரும் 12ஆம் தேதி ”மதகஜ ராஜா” திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பிரி ரீலிஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், டைரக்டர் சுந்தர் சி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விஷால் பேசும்போது, கைகள் பயங்கரமாக நடுங்கியது. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்ஷன் ஹீரோவாக பட்டையை கிளப்பிய விஷாலை இப்படி பார்க்க வருத்தமாக இருக்கிறது என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, விஷால் தனது உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என அவருக்கு அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.
விஷாலுக்கு கை நடுக்கம் மட்டும் இன்றி குரலும் நடுக்கத்துடன் தான் உள்ளது. இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் அடிப்பதாகவும், பட புரோமசனுக்காக காய்ச்சலுடன் வந்ததால் தான் அவரது கைகள் நடுக்கம், குரலில் பதற்றம் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஷால், “ஜெமினி பட தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முழுமையாக தயாரிப்பு பணிக்கு வர வேண்டும். இந்தாண்டில் சிறந்த நடிகருக்கான விருது எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால், சிறந்த பாடகருக்கான விருது கிடைக்கும்” என்றார்.
மதகஜராஜா படத்தில், நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், 2023இல் படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில், கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
Read More : ஆரம்பமே அதிரப்போகுது..!! இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை..!! எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன..?