fbpx

களைகட்டும் தீபாவளி..!! ரூ.27,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!! வணிகர் சங்கம் தகவல்..!!

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, கணிசமான பொருளாதார தாக்கத்தையும் கண்டுள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனை மற்றும் இனிப்பு பலகாரங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்து காணப்படும்.

இம்முறை வழக்கத்திற்கு மாறாக நாடு முழுவதும் ரூ.27,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி விற்பனை தொடங்கியதில் இருந்து வெள்ளி விற்பனை ரூ.3,000 கோடியை எட்டியது. நவம்பர் 10ஆம் தேதி அன்று மட்டும் ஆடைகள் உட்பட ரூ.50,000 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகி உச்சத்தை எட்டியது.

பொருளாதார நடவடிக்கைகளின் இந்த எழுச்சி தீபாவளியின் கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதோடு மட்டுமின்றி, சவாலான காலங்களிலும் கூட இந்தியாவின் நுகர்வோர் சந்தையின் பிரம்மாண்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Chella

Next Post

பட்டாசு வெடிக்கும்போது இதை மறந்துடாதீங்க..!! செல்லப்பிராணிகளின் உயிருக்கே ஆபத்து..!!

Sat Nov 11 , 2023
தீபாவளிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க ரெடியாகி வரும் நிலையில், அனைவரும் ஒரு விஷயத்தை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். பட்டாசு சத்தம் காரணமாக நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவற்றிற்கு அதிக தீங்கு ஏற்படாத அளவில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். நாய்கள் உள்ளிட்ட விலங்களும், பறவைகளும் வெடி சத்தம் கேட்டு மிகவும் பயப்படும் என்பதால், அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பதை […]

You May Like