fbpx

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!

கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். தங்கம் நேற்று ஒரு கிராம் 5,835 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,765 ரூபாயாகவும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 46,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, 6,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 49,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

ஆக்சிஜன் உதவியுடன் விஜயகாந்த்..!! உடல்நிலையில் பின்னடைவு..? தீவிர சிகிச்சை..!!

Sat Dec 9 , 2023
விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்து வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் […]

You May Like