fbpx

புத்தாண்டு கொண்டாட்டம்..!! சாதனை படைத்த பிரியாணி..!! சைலண்டாக விற்பனையான காண்டம்..!!

புத்தாண்டு தினத்தன்று ஸ்விகி மற்றும் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.

2023 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. ஆன்லைன் உணவு நிறுவனங்களும் தீவிரமாக இயங்கின. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் மட்டும் 3.50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. எந்த பிரியாணி அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் என ஸ்விகி ட்விட்டரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், 75.4 சதவிகிதம் ஐதராபாத் பிரியாணிக்கும், 14.2 சதவிகிதம் லக்னோ பிரியாணிக்கும், 10.4 சதவிகிதம் கொல்கத்தா பிரியாணிக்கும் வாக்கு அளித்திருந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்..!! சாதனை படைத்த பிரியாணி..!! சைலண்டாக விற்பனையான காண்டம்..!!

மேலும், ஸ்விகி மூலம் சனிக்கிழமை இரவு 7.29 மணிக்கு 1.65 லட்சம் பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் பிரியாணி விற்பனையாகும் உணவகங்களில் ஒன்றான பவார்ச்சி, 2021 புத்தாண்டு தினத்தன்று நிமிடத்திற்கு இரண்டு பிரியாணிகளை டெலிவரி செய்ததாகவும், டிசம்பர் 31, 2022 அன்று தேவையை பூர்த்தி செய்ய 15 டன் சுவையான உணவை தயாரித்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அதுபோலவே டொமினோஸ் இந்தியா நிறுவனம் 61,287 பிட்சாவை டெலிவரி செய்ததாக ஸ்விகி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1.76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கு 12,344 கிச்சடி உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் விநியோகிக்கும் ஸ்விகி இன்ஸ்மார்ட் நிறுவனம் மூலம் 2,757 டியூரெக்ஸ் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

Chella

Next Post

50 நாட்களில் ஓநாயாக மாறிய மனிதன்..!

Mon Jan 2 , 2023
ஜப்பானைச் சேர்ந்த மனிதன் தன்னை முற்றிலும் ஓநாய் ஆக மாற்றிக் கொள்கிறான். இதனை பற்றி அந்த நபர் கூறியதாவது “எனக்கு சின்ன வயசுல இருந்தே விலங்குகள் ரொம்ப பிடிக்கும். டிவியில சில பேர் மிருகங்கள் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். அதையெல்லாம் பார்த்து நான் இப்படி ஒரு விலங்காக மாறணும்னு நினைச்சேன்” என்கிறார் அந்த நபர். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து ஜெப்பெட் என்ற நிறுவனத்தை […]

You May Like