fbpx

ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசின் அசத்தலான பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! வெளியான புதிய தகவல்..!!

நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்போடு சேர்த்து ரூ.1,000 ரொக்க பணத்தையும் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை பொருட்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது வழங்கப்படவில்லை.

ஹேப்பி நியூஸ்..!! தமிழக அரசின் அசத்தலான பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! வெளியான புதிய தகவல்..!!

அதன் பிறகு பொங்கல் பரிசு தொப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிய நிலையில், ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விளாசினர். இதன் காரணமாக அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்போடு சேர்த்து 1000 ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது ரேஷன் கடைகளில் மஞ்சள் பை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு பொருட்களை மஞ்சள் பையில் வழங்கினால் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுமாம். இதனால்தான் மஞ்சள் பை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் பிக்பாஸ் ஜூலி..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

Tue Nov 29 , 2022
பிரபல நடிகரின் மகனை பிக்பாஸ் ஜூலி காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் ஜூலி என்றதும் நம் நினைவுக்கு வருவது குறும்படம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன்களை கடந்து வந்தாலும் முதல் சீசனில் பார்த்த அந்த குறும்படத்திற்கு ஈடு இணையாகாது. அந்த குறும்படத்தில் வயிறு வலி என்று அழுது ஜூலி ஆர்ப்பாட்டம் செய்ததும், ஓவியா ஜூலியை சமாதானம் படுத்தியதையும், ஜூலி பேச்சை மாற்றி பேசி […]
பிரபல நடிகரின் மகனை காதலிக்கும் பிக்பாஸ் ஜூலி..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

You May Like