fbpx

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொதுத்தேர்வு வினாத்தாளில் குளறுபடி..!! போனஸ் மதிப்பெண் வழங்குவதாக அறிவிப்பு..!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடிகள் உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12ஆம் வகுப்​பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, நடப்​பாண்டில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்​கப்​பட்​டுள்ள 4,113 மையங்​களில் சுமார் 9 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழுதினர். அதன்​படி தமிழ், ஆங்கிலம், கணிதம், அறி​வியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு முடிந்த நிலையில், தற்போது அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 30ஆம் தேதி வரை விடைத்​தாள் திருத்​தும் பணி​கள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் தான், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியான இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அதிருப்தியில் அமைச்சர் பிடிஆர்..!! ’நிதியே ஒதுக்குவதில்லை’..!! ’யாரிடம் அதிகாரம் இருக்கோ அங்க கேளுங்க’..!! பேரவையில் பரபரப்பு..!!

English Summary

Due to irregularities in the question paper of the 10th grade public examination, the examination department has decided to award a bonus mark.

Chella

Next Post

தங்க சிலுவை முதல் அரண்மனை வரை.. ஆடம்பரத்தை தவிர்த்த போப்..!! பலருக்கு தெரியாத சுவாரஸ்ய உண்மைகள் இதோ..

Mon Apr 21 , 2025
From being first to take the name Francis to refusing Apostolic Palace, some interesting facts

You May Like