இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 266 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். இந்தியா அடுத்ததாக நேபாள அணியுடன் இன்று மோதவுள்ளது. இந்த போட்டியில் பும்ராவுக்கு பதிலாக முகம்மது ஷமி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேஷ் தம்பதியினருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குழந்தை பிறந்துள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பும்ரா.
இது குறித்த ஜஸ்ப்ரித் பும்ராவின் பதிவில், எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் சிறுவன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம் அனைத்திற்கும் காத்திருக்க முடியாது- ஜஸ்பிரித் மற்றும் சஞ்சனா” என்று குறிப்பிட்டுள்ளார்.