ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பம் இருக்கின்ற மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக எழுதிய தேர்வில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றெடுக்க வேண்டும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஒரு லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும் இந்த தகுதி இருக்கும் மாணவ, மாணவிகள் https://images.assettype.com/kalkionline/2023-06/0a7f2ec6-aa82-481b-baae-9cfd3118853c/Kalki_Trust_Form.pdf என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதோடு உரிய ஆவணங்களை இணைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை கீதம் முதல் மாடி நம்பர் 14 நான்காவது பிரதான சாலை கஸ்தூர்பா நகர் அடையாறு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.