தலைநகர் சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கப்படும் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து, 1.0 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கழிவுநீர் அகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி ஒரு மாதத்திற்கு 1.25% என்ற அளவில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற காலக்கெடுவுக்குள் குடிநீர், கழிவு நீர் அகற்றுவரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு இந்த வரி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.