தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், 10ஆன் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி தேர்வு முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த மாதம் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து நாளை முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், 10ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.