fbpx

வலியால் கதறிய ஹர்திக்..!! 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பந்துவீசிய விராட் கோலி..!!

இந்தியா – வங்கதேசம் இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 9-வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா, பந்தை தடுக்க முயன்றபோது, பந்து காலில் பலமாக பட்டதில் அவர் காயமடைந்தார். வலியால் துடித்த அவர் உடனடியாக மருத்து பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அவர் அந்த ஓவரில் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், காயம் காரணமாக வெளியேறியதால், மீதமுள்ள பந்துகளை வீச புதிய பவுலர் தேவைப்பட்டார். இதையடுத்து, விராட் கோலி 9-வது ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை வீசினார்.

கோலி கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் பந்து வீசினார். இதில் 2 ஓவருக்கு 12 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 161 ஓவர்களை வீசியுள்ள அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Chella

Next Post

நாட்டிலேயே முதல்முறை..!! 4 நாள் சிசுவின் உடல் உறுப்புகள் தானம்..!! எங்கு தெரியுமா..?

Thu Oct 19 , 2023
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடம் இருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் போது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்தில் வளர்ந்துள்ளது. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண்கள், கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக பெற முடியும். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் மூளைச் சாவு […]

You May Like