ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆக்ஷன் மற்றும் சேஸிங் படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஹரி, தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது 3வது முறையாக இணைந்துள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரத்னம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆக்ஷன் ஹீரோ விஷால் உடன் ஹரி இணைந்திருப்பதால், இப்படமும் ஆக்ஷன் நிறைந்த படமாகவே உருவாகி இருக்கிறது. ரத்னம் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஹரி எப்போதுமே தனது படங்களில் தனது பெயர் வரும் இடத்தில் கோவில் கோபுரத்தை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது.
புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சண்டை காட்சிகள், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் படம் சிறப்பாக வந்துள்ளது. விஷாலுக்கு இன்னொரு வெற்றி என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அதே சமயம், படம் ஆவ்ரேஜ் என்றும், ஹரியின் வழக்கமான படம் தான் எனவும் பதிவிட்டுள்ளனர். அவரது முந்தைய படங்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. காட்சி அமைப்பில் புதுமை இல்லை. வழக்கத்திற்கு மாறான தனது திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ள ஹரி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்று கலவையான விமர்சனங்களையும் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் மூலம் பழைய விஷால் மீண்டும் வந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.