பஞ்சாப்-ன் முன்னாள் சபாநாயகர் உடல்நலக்குறைவால் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பஞ்சாப் சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும், சிரோமணி அகாலிதள தலைவருமான நிர்மல் சிங் காலோன் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

1997 முதல் 2002 வரை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகள் மாநில அமைச்சராகவும், 2007 முதல் 2012 வரை பஞ்சாப் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் நிர்மல் சிங் பணியாற்றினார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவுக்கு சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “மூத்த சிரோமணி அகாலி தலைவரும் முன்னாள் பஞ்சாப் சட்டசபை சபாநாயகருமான நிர்மல் சிங் ஜியின் மறைவு குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர் நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பாதல் ட்வீட் செய்துள்ளார்.

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் சூரியன் அருகே உள்ள தாதுஜோத் கிராமத்தில் நிர்மல் சிங்கின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பின்பக்கமாக வீட்டிற்குள் வந்த இளைஞர் செய்த கொடூரச் செயல்... அதிர்ச்சியில் உறைந்த பெண்...!

Sat Jul 16 , 2022
திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் முகமது சையது. இவரது மனைவி சகிலா பேகம். முகமது சையது ஒரு பிரபல துணி கடையில் வேலை செய்து வருகிறார்.   இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் 16 வயதான மூத்த மகள், காட்டூர் பாப்பா குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like