இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி கேப்டன்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி டி20 போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் T20I போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இந்த அற்புதமான இன்னிங்ஸிற்காக ஹர்மன்பிரீத் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வரலாறு படைத்துள்ளார். ஆண்கள் அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு ஹர்மன்பிரீத் கவுர் முன்னேறியுள்ளார். டி20 போட்டிகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது ஹர்மன்பிரீத் பெற்றுள்ளார். ஹர்மன்ப்ரீத் தற்போது 6 P.O.M விருதுகளைப் பெற்றுள்ளார். முன்னதாக, இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 ஆட்டநாயகன் வெற்றி பெற்ற சாதனையை படைத்திருந்தார். அதிக T20I P.O.M வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள்: 6- ஹர்மன்பிரீத் கவுர், 5- ரோஹித் சர்மா, 3- விராட் கோலி, 2- மிதாலி ராஜ்.