ஹரியானா மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2, 2022 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், கைதால், மகேந்திரகர், பஞ்ச்குலா, பானிபட் யமுனாநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஜில்லா பரிஷத் மற்றும் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதனால் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் பொது விடுமுறையாக இருக்கும். கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த தேதிகளில் மூடப்பட்டிருக்கும், இதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையையும் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.