வங்கிக் கணக்கு, கேஒய்சி, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் பெறுவது (அ) அரசு வசதிகளை பயன்படுத்திக் கொள்வது என எதுவாக இருந்தாலும் ஆதார் கார்டு தான் அவசியமாக இருக்கிறது. அதேபோல் நாம் ஒரு சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் கார்டை தான் அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் தொலைத் தொடர்புத்துறையின் விதிகளின் படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம்கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டும் பயன்படுத்த முடியாது. ஆதார் மூலம் எத்தனை சிம்கார்டுகள் பெறப்பட்டிருக்கிறது என்பதை நீங்களே கண்டறிய முடியும்.
அதாவது, DoT tafcop.dgtelecom.gov.in போர்ட்டல் வாயிலாக தங்களின் ஆதார் கார்டில் எத்தனை சிம்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ள முடியும். அதோடு அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை தடுப்பதற்குரிய கோரிக்கையையும் அனுப்ப முடியும். அப்பட்டியலில் ஏதேனும் போலி சிம் கார்டு இருந்தால் அதையும் பிளாக் செய்யலாம். பயன்பாட்டில் இல்லாத சிம்கார்டுடன், அதனை உங்களது தளத்தில் இருந்து அகற்ற விரும்பினால் அகற்றிக் கொள்ளலாம்.