fbpx

தமிழகத்திலும் குரங்கம்மை பாதிப்பு பரவியுள்ளதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பதில்..!

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லி மாநிலங்களில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையில் இறங்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானன் கேப்ரியாசஸ் தலைமையில் ஜெனீவாவில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், காணொலி வாயிலாக பேட்டி அளித்த கேப்ரியாசஸ், ”குரங்கு அம்மை உலக அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது” என்று அறிவித்தார்.

தமிழகத்திலும் குரங்கம்மை பாதிப்பு பரவியுள்ளதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பதில்..!

இந்நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை தொற்று இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பன்னாட்டு விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முகத்திலோ, முழங்கை கீழ் கொப்பளங்கள் உள்ளதா என ஒவ்வொருவரையும் விமான நிலையங்களில் கண்காணிக்க அறிவுறுத்தி வருகிறோம். தற்போது குரங்கம்மையின் பாதிப்பு 63 நாடுகளில் கடந்திருக்கிறது. தமிழகத்துக்கும், கேரளாவுக்கு இடையே உள்ள 13 எல்லைப் புறங்களிலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்று வரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அரசு மருத்துவரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..! 200 சவரன் நகைகள், பைக் திருட்டு..!

Sun Jul 24 , 2022
அரசு மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இலுப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சஞ்சீவ் நகரில் வசித்து வருபவர் மருத்துவர் ஆசிக் அசன் முகமது. இவர், முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு இவரின் சகோதரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்தோடு புதுக்கோட்டை சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை மருத்துவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை […]

You May Like