நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் நிஃபா வைரஸ் தொற்று உள்ளதாகவும் அந்த நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் சோதனை நடத்தப்படும் என்றும் தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நிஃபா வைரஸ் தொற்று இதுவரை இல்லாத சூழ்நிலையில், அதை தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.