fbpx

500 மி.லி ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதா…? கூட்டுறவு இயக்குனர் விளக்கம்…!

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைகாட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் Violet நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொது மக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் Cow Milk அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை Cow Milk 200 ml Delite எனும் பெயரில் ரூ.10- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகளை அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கரண்ட் பில் அதிகமா வருதா.? இந்த வழிகளை கடைப்பிடிங்க.! அடுத்த மாசம் பாதியா குறையும்.!

Fri Nov 17 , 2023
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதனால் பெரும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால், ஒவ்வொரு குடும்பஸ்தர்களும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில எளிமையான வழிகளை கடைபிடிப்பதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம். நமது வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண பல்பு மற்றும் டியூப் லைட் ஆகியவற்றிற்கு பதிலாக எல்இடி பல்பு மற்றும் டியூப் லைட்டுகளை பயன்படுத்தலாம். இவை […]

You May Like