fbpx

வெள்ளத்தில் சொத்து பத்திரம் சேதமாகிவிட்டதா..? கவலைப்படாதீங்க..!! பதிவுத்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்..!!

சென்னையில் மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்த நிலையில், பொதுமக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். அதிலும் தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டதால், அவர்கள் மொட்டை மாடிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் பாழாகி உள்ளன. இதில், சொத்து பத்திரங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்துள்ளன.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தமிழ்நாட்டில் 2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது, சில இடங்களில் சார் – பதிவாளர் அலுவலகங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வீடுகளில் மக்கள் வைத்திருந்த சொத்து பத்திரங்களும் பாழாகிவிட்டன. அந்த நேரத்தில், வில்லங்க சான்றிதழ் மற்றும் அடையாள சான்றுகள் அடிப்படையில், சான்றிடப்பட்ட பிரதி ஆவணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதற்காக சிறப்பு முகாம்கள் முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த முகாம்கள் வாயிலாக, மாற்று பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இதையடுத்து, விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, சொத்து பத்திரங்களின் நகல்கள், வில்லங்க சான்றிதழ், அடையாள சான்றிதழ்கள் போன்றவற்றின் பிரதி ஆவணங்கள் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு..!! 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்..!!

Fri Dec 8 , 2023
வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி விற்பனை செய்ததாக 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 17 செயலிகளும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களை உளவு பார்த்ததும் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகள் திருடி முறைகேடாக பயன்படுத்தியுள்ளன. […]

You May Like