fbpx

மிக்ஜாம் புயலால் உங்கள் கார், இருசக்கர வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா..? உடனே இந்த நம்பருக்கு போன் அடிங்க..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் கார், இருசக்கர வாகனங்களில் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை பழுது பார்க்க ஷோரூம் மற்றும் மெக்கானிக் கடைகளை நாடி வருகின்றனர்.

இந்நிலையில், பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், ”சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டது. இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வுருகிறது.

அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் என்ஜினனை ஆன் செய்யாமல் மீட்பு வாகனங்களின் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு வருமாறும் வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களின் முகவர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தொடர்புடைய நிறுவனங்கள் விரிவான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள டோல் ப்ரீ எண்கள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சாலையோர உதவி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹோண்டா நிறுவனம் சென்னை முழுவதும் முகாம்களை தொடங்கி நடத்தி வருகிறது. டிசம்பர் 18ஆம் தேதி வரை இந்த முகாம் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் நடைபெறவுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் சென்னை முழுவதிலும் 68 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதோடு பொதுமக்கள் தங்களின் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதாகி இருந்த டோல் ப்ரீ எண்களை அழைக்கலாம். அதன்படி, ராயல் என்பீல்ட் 1800 2100 007, யமஹா 1800 4201 600, டிவிஎஸ் 1800 2587 555, ஹோண்டோ 1800 1033 434, சுசுகி 1800 1217 996, மாருதி சுசுகி 1800 1800 180 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேம் லான்சன் டொயட்டா 1800 1020 909, 1800 2090 909, கியா மோட்டார்ஸ் 1800 1085 000, ஹுண்டயாய் 1800 1024 645, டாட மோட்டார்ஸ் 1800 209 8282, டொயட்டோ 1800 102 50001 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பழுதான வாகனங்களின் பாதிப்பின் தன்மை மற்றும் வாகன பதிவு எண் தெளிவாக தெரியும்படி புகைப்படங்களை எடுத்து தங்களது காப்பீடு கோரும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் இந்த டோல்ப்ரீ எண்களை தொடர்பு கொள்வதன் மூலம் குறிப்பிட்ட நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு சிறப்பு மற்றும் நடமாடும் முகாம்களை அறிந்து அதன்மூலம் வாகனங்களை பழுது நீக்கி கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"ரத்தம் வடிவதை பார்த்து பதறிய..."!ஆசையாக திருமணத்திற்கு கிளம்பி சென்ற 6 வயது சிறுமி.! கடத்திச் சென்று கொடூர பாலியல் வன்புணர்வு .!

Mon Dec 11 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் […]

You May Like