fbpx

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வேட்பு மனு.. சசிதரூர் முதல் ஆளாக பெற்றார்…

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு  வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சசி தரூர் சார்பில் அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை பெற்றுள்ளனர். மேலும், சசி தரூர் மொத்தம் 5 செட் வேட்புமனுக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் யார்யார்களத்தில் இறங்கப் போகின்றார்கள் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும். முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் , இதுவரை இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் இத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை என்பது போலவே பேசி வருகின்றார்.

Next Post

சோனியாகாந்தியுடன் லாலுபிரசாத், நிதிஷ் சந்திப்பு

Sun Sep 25 , 2022
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன்  டெல்லியில் சந்தித்தனர்.  வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் […]

You May Like