fbpx

முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்..!! 2-வது ஓவரில் மொத்தம் 5 விக்கெட்..!! சாதனை படைத்த உனத்கட்..!!

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்றுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சிக் கோப்பை ஆட்டத்தில் டெல்லி-சௌராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை விழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் சௌராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட். 3-வது பந்தில் துருவ் ஷோரேவை போல்ட் செய்தார். அடுத்த இரு பந்துகளில் வைபவ், யாஷ்துல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்டிரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை உனத்கட் படைத்துள்ளார்.

முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்..!! 2-வது ஓவரில் மொத்தம் 5 விக்கெட்..!! சாதனை படைத்த உனத்கட்..!!

தனது 2-வது ஓவரில் ஆயுஷ் பதோனி, ஜான்டி சித்து ஆகியோரின் விக்கெட்டுகளையும் எடுத்து 2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் அவுட்ஆனார்கள். இதனால், டெல்லி அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. உனத்கட் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்..!! 2-வது ஓவரில் மொத்தம் 5 விக்கெட்..!! சாதனை படைத்த உனத்கட்..!!

31 வயதாகும் உனத்கட் 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் பெரிதளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2022ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மீண்டும் அவர் இடம் பிடித்தார். அதில், சிறப்பான பங்களிப்பை கொடுத்த உனத்கட், தற்போது ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார்.

Chella

Next Post

வெளிநாடுகளில் தொடங்கிய பதான் டிக்கெட் புக்கிங்...! முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல்...!

Tue Jan 3 , 2023
ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்திய ரசிகர்கள் முன்பதிவுக்காக காத்திருக்கும் நிலையில், வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் நேற்று தொடங்கியது. இந்தியாவில் பதான் பட சர்ச்சைகள் : இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

You May Like