fbpx

நீங்கள் வைக்காமலேயே வீட்டில் துளசி செடி வளர்ந்துவிட்டதா? அதற்கு என்ன அர்த்தம்..

உங்கள் வீட்டில் துளசி செடி திடீரென முளைத்துவிட்டால் எத்தனை நன்மைகள் என்பதையும், அதே நேரம் துளசி வாடினாலோ அல்லது சரியாக வளரவில்லை என்றாலோ என்ன அர்த்தம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

துளசி செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. துளசி செடி லட்சுமி தேவியின் இருப்பிடம் என்று நம்பப்படுகிறது. துளசி செடியை தவறாமல் வழிபடும் வீடுகளில், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது. பரந்தாமனுக்கு மிகவும் பிடித்த மூலிகைகளில் ஒன்று துளசி செடி. இது இந்துக்களுக்கு புனிதச் செடியாகும். இதை மிகவும் புனிதமாக வழிபட வேண்டும். வீடுதோறும் முற்றத்தில் துளசி செடி இருக்க வேண்டும். அதை அன்றாடம் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி செடி வாடினால் அல்லது சரியாக வளராவிட்டாலோ உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது.

அதனால்தான் துளசியை மிகவும் கவனமாக வளர்க்கிறார்கள். துளசி வீட்டில் இருந்தால் எதிர்மறை சக்திகள் வருவதற்கே அஞ்சும். சில வீடுகளில் துளசி செடி தானாக வளரும். அவ்வாறு வளர்ந்தாள் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும். அதே நேரத்தில் இந்தச் செடியை சுத்தமான இடத்தில் வளர்க்க வேண்டும். அசுத்தமான இடத்தில் வளர்த்தால் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சுத்தமான இடத்தில் நட்டுவிட வேண்டும்.

வாடிய துளசியை அகற்றலாமா : திடீரென துளசி செடி, வளர்வதை நிறுத்திவிட்டாலோ அல்லது அதன் இலைகள் காய்ந்துவிட்டாலோ தரையில் இருந்து பிடுங்க கூடாது. இந்த மரம் தவறான நாளில் வீட்டின் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டால், அது மோசமான பலன்களைத் தருகிறது. சூரிய கிரகணம், ஏகாதசி, அமாவாசை, சந்திர கிரகணம், பௌர்ணமி, அமாவாசை, ஞாயிறு, சூதக், பித்ர பக்ஷம் ஆகிய மூன்று சடங்குகளுக்கு முன் துளசி செடியை பிடுங்கினால் கெட்ட பலங்கள் ஏற்படும். மகிழ்ச்சியையும் செழிப்பையும் பராமரிக்க, விசேஷ நாட்களில் காய்ந்த துளசி இலைகளை பறிக்க கூடாது.

Read more ; போலீஸ் என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!! – மகாராஷ்டிராவில் பரபரப்பு

English Summary

Have a basil plant suddenly grown at home without you keeping it? What does that mean..

Next Post

மரண அடி!. ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் விளாசிய புஜாரா!. லாராவின் சாதனையை சமன்செய்து அசத்தல்!

Tue Oct 22 , 2024
Death blow! Pujara hits double century in Ranji Trophy! Beating Laura's record is awesome!

You May Like