திருமணமானவர்கள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் 72 ஜோடிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திருமணமானவர்கள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நிறைய பெற்றுக்கொள்ளாதீர்கள். அதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்று கூறியபோது, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு தான், ஆனால், தற்போது நாம் தண்டிக்கப்படுகிறோம். தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்தால், தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் குறையும். ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக அமல்படுத்தாத மாநிலங்கள் இதனால் நன்மை அடையப் போகின்றன. வடமாநிலங்கள் 100 தொகுதிகள் வரை பெறப் போகின்றன. எனவேதான் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்” என்றார்.
Read More : மக்களே குடையை மறந்துறாதீங்க..!! 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை அலர்ட்..!! வெளுத்து வாங்கப் போகுது..!!