fbpx

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு எப்போது கிடைக்கும்..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு எப்போது கார்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த மே 2021 முதல் இப்போது வரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாதம்தோறும் சராசரியாக 40,000 பேர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனால், தற்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் மற்றொரு கார்டும் கேட்டும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் உணவு வழங்கல் துறைக்கு வரும் விண்ணப்பங்கள் அதிகமாகிவிட்டதாம். இதையடுத்து, தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக மைய தலைவர் டி.சடகோபன் கூறுகையில், “தகுதியான நபருக்கு கூட, புதிய ரேஷன் கார்டு வழங்க தாமதமாகிறது. இதுகுறித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் கேட்டால், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக, புது ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், அதை உயரதிகாரிகள் மறுக்கின்றனர்.

ஒரு திட்டத்திற்காக, அத்தியாவசிய உணவு தேவைக்கான ரேஷன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்கக் கூடாது. கார்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்க, புது கார்டுக்கு விண்ணப்பம் செய்வதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Chella

Next Post

"சீமானை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை.." தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வெல்வோம் - அண்ணாமலை

Sat Sep 2 , 2023
கோவையில் பத்திரிக்கியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது என்றார். மேலும் சீமானின் கொள்கை தேர்தலில் தனியாக போட்டியிடுவது இல்லை. அவரை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை என்பது தான் காரணம் என்று கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் பேசியதாவது, “தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அனைத்து தேர்தலும் ஒரே நேரத்தில் […]

You May Like