நாட்டில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டை வைத்து தான், மத்திய – மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளையும் பெற முடியும். அதேபோல், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதனால், புதிதாக திருமணம் ஆனவர்கள் உள்ளிட்டோர் தனி ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
அதுவும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஏராளமான மக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன்படி, இ-சேவை மையங்களில் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனால், தற்போதும் பலர் புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, “புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 57,327 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 18,09,607 புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,67,795 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அவர்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்” என்றார்.
Read More : அடிக்கிற வெயிலுக்கு Ice Cream-ஐ அதிகம் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? எச்சரிக்கையா இருங்க..!! ஆபத்து..!!