fbpx

ரேஷன் பொருள் வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! பணியாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.5ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், ”நியாய விலைக்கடையில் பணிபுரியும் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியமும் வழங்க வேண்டும் என்றும் சேதமடைந்த நியாயவிலைக் கடைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read More : வீட்டிலிருந்து மாதம் ரூ.30,000 சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..? இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

K. Balasubramanian, Special President of Tamil Nadu Fair Price Shop Employees Union, has said that they will go on strike on September 5th.

Chella

Next Post

வாரம் 5 நாள் மட்டுமே வேலை.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க ரெடியா?

Tue Aug 20 , 2024
Tech Mahindra in Chennai has released a notification to fill the vacancies. According to this, people are going to be selected for the work of Contract Assurance.

You May Like