fbpx

தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துருக்கீங்களா..? இந்த அறிவிப்பையும் கொஞ்சம் பாருங்க..!!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14ஆம் தேதி வாக்கில் உருவாகக் கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட சொந்த ஊருக்கு லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Chella

Next Post

’நீ அன்னைக்கு கட்டி பிடிச்சதும் ரொம்ப மூடு ஆகிடுச்சு’..!! பூர்ணிமாவிடம் ஓபனாக பேசிய விக்ரம்..!! வைரல் வீடியோ..!!

Sat Nov 11 , 2023
பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் விக்ரம் சக போட்டியாளரான பூர்ணிமாவிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 காதல், சண்டை என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்ட போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பிய நிலையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் சிலர் செய்யும் […]

You May Like