மகளிர் உரிமைத்தொகை முகாம்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம்கள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், விண்ணப்பங்களில் மக்கள் சரியான தகவல்களை தான் கொடுத்திருக்கிறார்களா..? என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
களவு ஆய்வுப் பணிகளில் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பயனாளிகளின் வீடுகளில் விண்ணப்பம் பதிவிடும்போது செல்போனுக்கு வந்த மெசேஜ் விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்தனர். இதையடுத்து, முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியலும் தயார் செய்யப்பட உள்ளது.