fbpx

பப்பாளி வாட்டர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?… இதன் நன்மைகளை இன்ஸ்டாவில் பதிவிட்ட நபர்!… நீங்களும் டிரை பண்ணுங்க!

பப்பாளி கலந்த நீரின் நன்மைகள் பற்றி தெளிவாக கூறி, இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்து நீங்களும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக பப்பாளி போன்ற பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பப்பாளி கலந்த நீரின் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இதைப் பற்றி அனைத்தையும் தெளிவாக கூறி, இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டிருக்கிறார், ஆர்மென் ஆடம்ஜன். ஒட்டுமொத்தமாக, நல்வாழ்வுக்கு ஒருவர் ஏன் பப்பாளி தண்ணீரை உட்கொள்ள வேண்டும் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “பப்பாளியின் நன்மைகளைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது! இதோ பப்பாளி தண்ணீர் செய்வது எப்படி என்று பாருங்கள்!” என்று அவர் சமூக ஊடக தளத்தில் எழுதி, செய்முறை விளக்கம் அளித்துள்ளார்.

செய்முறை: பப்பாளியை இரண்டாக நறுக்கவும். தோலை உரிக்கவும். விதைகளை கீறி எடுக்கவும். சிறிய துண்டுகளாக நறுக்கவும். சுமார் ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சூடாக இறக்கவும். ஆற விடவும். பிறகு, பப்பாளி தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து வழக்கமான தண்ணீர் போல் குடிக்கவும். ஆடம்ஜனின் கூற்றுப்படி, பப்பாளி தண்ணீரில் வைட்டமின்கள் நிரம்பியுள்ளதாகவும், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகவும், செரிமானத்திற்கு நல்லது எனவும், மாதவிடாய் வலியை நீக்குவதாகவும், சிறுநீரகங்களைப் பாதுகாப்பதாகவும், ஒற்றைத் தலைவலி மற்றும் கீல்வாதத்திற்கு உதவுகிறது என்றும் தெரிகிறது.

இங்குதான் லைகோபீன் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. ஃபைபர் நன்மைகளைப் பெற, பழங்களை உட்கொள்வது சிறந்தது என்றாலும், சில சமயங்களில், சமைக்கும்போது மேலும் சில சேர்மங்களின் அளவை அதிகரிக்கிறது. பப்பாளியில் உள்ள லைகோபீன் வெப்ப நிலைத்தன்மை வாய்ந்தது என்று பதிவு செய்யப்பட்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல் விளக்கினார். “லைகோபீன் சூடு படுத்தப் படும்வரை செல் சுவரில் சிக்கி இருக்கும். சூடானால்தான் வெளியில் வந்து அதன் நன்மை உடலுக்கு கிடைக்கும். இந்த பைட்டோநியூட்ரியண்ட் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் உதவிகரமாக உள்ளது, இதயப் பாதுகாப்பு மற்றும் நரம்பியல் பாதுகாப்பைக் கொண்டுள்ளது” என்று கோயல் கூறினார்.

எடை இழப்புக்கு இந்த பழத்தின் பலனை நீங்கள் அடைய வேண்டும் என்றால், அதிகாலையில் பப்பாளி தண்ணீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தவும், அழுகை உடலில் இருந்து வெளியேற்றவும் உதவுகிறது என்று கோயல் கூறினார். “இந்த பானத்தில் உள்ள பப்பாளி க்யூப்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அவையும் உடலுக்கு நன்மைகளை சேர்க்கும். பப்பாளி க்யூப்ஸின் செல் சுவர்கள் கொதிக்கும் போது திறக்கப்பட்டு, அதன் லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களை வெளியிடப்படும். எந்த நேரத்திலும் எந்த பழ நீரையும் குடிக்கலாம் என்றாலும், பப்பாளி தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிகபட்ச நன்மைகளைத் தரும். இதில் பாப்பைன் என்சைம் இருப்பதால், இது குடலுக்கு ஏற்றது மற்றும் குடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, ”என்று கோயல் பகிர்ந்து கொண்டார்.

Kokila

Next Post

சர்க்கரை வியாதி முதல் எடை குறைப்பு வரை குடம்புளி!... கேரள மக்களின் ஆரோக்கிய ரகசியம் இதுதான்!...

Thu Apr 20 , 2023
கேரள மக்கள் புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தும் குடம்புளியின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் அறிவோம். குடம்புளி என்பது செடிகளில் விளையும் புளி. மலபார் புளி என்றும் கூறுகின்றனர். இது பார்க்க பூசணி போல் இருக்கும் சிறிய மஞ்சள் நிற பழங்கள். பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் சிறியதாக இருக்கும். இது பழமானதும் காயவைத்து அதன் சதை பகுதியை புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர் கேரள மக்கள். காயவைத்த பின்னர் இதற்கு ஒரு நல்ல […]

You May Like