fbpx

இந்த புனிதமான நீர் உங்கள் வீட்டில் இருக்கா..? அப்படினா இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!!

இந்து மதத்தில் கங்கை நீர் புனிதமாக பார்க்கப்படுகிறது. கங்கை நதி தாயாகவும் கருதப்படுவதால் அது வீட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
வீட்டை தூய்மையாக வைத்திருக்க பலரும் கங்கை நீரை வீட்டில் வைத்திருப்பார்கள். அபிஷேகத்திற்கு, வீட்டை சுத்தம் செய்வது என பல விஷயங்களுக்காக இதை பயன்படுத்துவார்கள். ஆனால், கங்கை நீரை வீட்டில் வைத்திருந்தால் சில விதிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும..? அது என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி, கங்கை நீரை ஒரு போதும் இருட்டான இடத்தில் வைக்கக்கூடாதாம். கங்கை நீர் புனிதம் என்பதால் அதை அழுக்கான இடத்திலும் வைக்கக்கூடாது. இறைச்சி, மது அருந்திய நாட்களில் கங்கை நீரை தொடக்கூடாது. இது வீட்டில் தோஷத்தை ஏற்படுத்தும். பாவத்தை அதிகரிக்கும். கங்கை நீரை எப்போதும் பூஜை அறையில் வைப்பது உசிதமாகும்.

அதுவும் பூஜை அறையில் உள்ள வடகிழக்கு மூலையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேறி நேர்மறை ஆற்றல் உள்ளே வரும் என கூறப்படுகிறது. சமீப காலத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டதால், பலரும் கங்கை நீரை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருக்கின்றனர். ஆனால், ப்ளாஸ்டிக் பாட்டிலில் கங்கை நீரை வைக்கக்கூடாதாம். புனிதமான பாத்திரத்தில் மட்டுமே கங்கை வைக்க வேண்டுமாம்.

Read More : திருமணம் ஆனதும் சினிமாவில் இருந்து விலகி குடும்ப பெண்களாக மாறிய நடிகைகள்..!! அட இவருமா..?

English Summary

According to astrology, Ganga water should never be kept in a dark place.

Chella

Next Post

சனி பகவானால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள்..!! இந்த லிஸ்ட்டில் நீங்களும் இருக்கீங்களா..?

Thu Sep 26 , 2024
Let us know the most favorite zodiac signs of Lord Saturn in this post.

You May Like