இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி தொகையை உயர்த்தி வருகிறது. அந்தவகையில், தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தலாம் என்றும் எவ்வளவு வட்டி உயர்கிறது என்பது குறித்த தகவலும் வெளியாகும் என்பதால், இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.