fbpx

ரூ.1,000 பணம் இன்னும் உங்களுக்கு வரவில்லையா..? நாளை முதல் இதை பண்ணுங்க..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை என்றால் நாளை முதல் நீங்கள் மேல்முறையீடு செய்ய முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து 1.06 கோடி பேருக்கு தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில், சுமார் 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் பின்வருமாறு மேல்முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் தேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல்முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்.

Chella

Next Post

திடீரென சந்திரபாபு நாயுடுவை சந்திக்க மறுத்த ரஜினி..!! அவரே சொன்ன பரபரப்பு பதில்..!!

Sun Sep 17 , 2023
கோவை மாவட்டம் சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை சென்றடைந்தார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் ரஜினியிடம் சிறையில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு […]

You May Like