fbpx

ஆதாரை நீங்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லையா..? இந்த தேதி வரை இலவசம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்றுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் ஆதாரை நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால் உடனே அதைச் செய்யலாம். 10 ஆண்டுகள் பழமையான ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க ஆதார் அமைப்பு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இலவச ஆதார் அப்டேட்டுக்கான காலக்கெடு ஜூன் 14 வரை அவகாசம் உள்ளது. உங்கள் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டை என்பதால் அதை அப்டேட்டாக வைத்திருப்பது முக்கியம். ஆதாரில் உள்ள முகவரி தவறாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, அதை அப்டேட் செய்ய வேண்டும்.

உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இனி ஜூன் 14ஆம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆதாரில் அப்டேட் செய்வதற்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன.

முதலாவது- My aadhaar போர்டல். இரண்டாவது- அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேவை மையம். இங்கு செல்வதன் மூலம் உங்களுடைய ஆதார் கார்டில் பெயர், புகைப்படம், மொபைல், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும். ஆனால், ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றால் அப்டேஷனுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். போர்ட்டல் மூலம் நீங்களே அப்டேட் செய்தால் பணம் செலுத்த தேவையில்லை. இலவச ஆன்லைன் ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடு முடிந்ததும் நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். ஆதாரை புதுப்பிப்பதற்கு அங்கே கட்டணம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.100, தனிநபர் தரவுகளுக்கு ரூ.50, ஆன்லைனில் ஆதார் டவுன்லோட் செய்ய ரூ.30, முகவரியை புதுப்பிப்பதற்கு ரூ.25 மற்றும் முகவரியை புதுப்பிக்க ரூ.50 என்ற அளவில் பணம் செலுத்த வேண்டும்.

Read More : MDH & Everest மசாலாக்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா..? இந்திய மக்களுக்கு FSSAI கூறுவது என்ன..?

Chella

Next Post

ரஜினியை Rolls-Royce காரில் அமரவைத்து அமீரகத்தை சுற்றிக்காட்டிய லு லு நிறுவன தலைவர்..!! வைரல் வீடியோ..!!

Wed May 22 , 2024
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை தொடங்கியுள்ளார். அந்த வகையில், “ஜெய் பீம்” படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” என்கின்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள […]

You May Like