fbpx

ரூ.6,000 திட்டத்திற்கு நீங்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? என்னென்ன ஆவணங்கள் தேவை..?

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018 டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தகுதியுடையவர்கள் – தகுதியற்றவர்கள் யார் யார்?

பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிப்பது எப்படி..?

பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும் அல்லது பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பிஎம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

என்னென்ன ஆவணங்கள் தேவை..?

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம். கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற ஒரு பிரிவு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

Chella

Next Post

’எங்கள யாரும் மிரட்டல’..!! இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்..!!

Fri Oct 6 , 2023
எங்களது கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக அரசு உறுதியளித்துள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் […]

You May Like