fbpx

ராமர் அணிந்திருக்கும் ஆபரணங்களை கவனிச்சீங்களா..? அடடே இதற்கு இவ்வளவு சிறப்பா..?

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பால ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி, ‘இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் அத்யாத்மா ராமாயணம், வால்மீகி ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கூர் ஆனந்தின் லக்னோவைச் சேர்ந்த ஹர்சஹைமல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் மூலம் இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற வேட்டி மற்றும் சிவப்பு நிற அங்கவஸ்திரம் பனாரஸ் பட்டால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தூய தங்க ‘ஜாரி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த டெக்ஸ்டைல் ​​டிசைனர் மணீஷ் திரிபாதி என்பவரால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அதிகாலை நேரத்தில் எழுந்தால், இப்படி கூட பிரச்சினை வருமா.?!

Tue Jan 23 , 2024
அதிகாலை நேரத்தில் நாம் எழுந்து விட்டால் நமக்கு அந்த நாட்களில் அதிகப்படியான நேரம் கிடைப்பது போல இருக்கும். அதிகாலை நாம் எழுவது நமக்கு உடலுக்கு அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகாலை எழுந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நிறைய பலன்களை தரக்கூடியதாக இருக்கிறது. சூரிய ஒளியில் நாம் நம்மை காலை வேளையில் காட்டும்போது நம் உடலுக்கு விட்டமின் டி கிடைக்கிறது. எனவே, உடல் இயற்கையாக ஊட்டச்சத்தை உற்பத்தி […]

You May Like