fbpx

உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? மறந்துறாதீங்க..!!

வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உள்ளதாம். இந்த காலாவதியான சிலிண்டரை பயன்படுத்தினால் வெடிக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வீட்டு கிட்சன்களில் காய்கறி இல்லாமல் கூட சில நேரங்கள் இருக்கும். ஆனால் கேஸ் சிலிண்டர் இல்லாத கிட்சன்களையே பார்க்க முடியாது. கிராமப்புறங்களிலும் கூட தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியே சமையல் வேலையை செய்கின்றனர். புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்கி விட்டால், தேவைப்படும் நேரத்தில் புக் செய்து புது சிலிண்டரை வாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், ஒரு சிலர் மார்க்கெட்டுகளில் சிலிண்டரை மட்டும் வாங்கிக் கொண்டு தேவைப்படும் சமயத்தில் கேஸ் நிறுவனத்திற்கு கொண்டு போய் சிலிண்டரை நிரப்பி மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சிலிண்டரை இப்படி மீண்டும் மீண்டும் ரீஃபில் செய்து பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் ஆனது என்று சொல்கிறார்கள்.

கேஸ் சிலிண்டர் என்று சொல்லப்படும் எரிவாயு உருளைக்கும் காலாவதி தேதி உண்டு என சொன்னால் உங்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக உள்ளதுதானே. அது மட்டும் இல்லை.. அந்த காலாவதி தேதியை தாண்டி சிலிண்டரை பயன்படுத்தினால் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதோடு வெடிக்க கூட செய்யலாம் என்று அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். ஒவ்வொரு சிலிண்டரிலும் அதன் காலாவதி தேதி குறித்து குறியீடு எண் இடம் பெற்று இருக்குமாம். அதாவது, சிலிண்டரின் மேல் பகுதி அதாவது நாம் பிடித்து தூக்கும் இடத்தில் உள்புறமாக ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் டி வரையிலான ஆங்கில எழுத்தும் அதன் எண்களும் பெயிண்டில் இடம் பெற்றிருக்கும்.

அதன் அர்த்தம் என்னவென்றால், ஆங்கில எழுத்துக்கள் காலாவதி ஆகும் மாதத்தையும் எண்கள் ஆண்டையும் குறிப்பிடுகிறது. அதாவது ஏ என்பதன் அர்த்தம் முதல் காலாண்டு ( ஜனவரி முதல் மார்ச்), பி – என்பதன் அர்த்தம் இரண்டாவது காலாண்டு (ஏப்ரல் முதல் ஜூன்), சி என்றால் ஜூலை டூ செப்டம்பர் (மூன்றாவது காலாண்டு), டி என்பதன் அர்த்தம் அக்டோபர் முதல் டிசம்பர் (நான்காவது காலாண்டு) என்பதை குறிக்கிறது. எடுத்துக்காட்டாக சிலிண்டரில் C-26 என்று எழுதியிருந்தால் அதன் காலாவதி தேதி ஜூலை முதல் செப்டம்பர் 2026′ என்பதாகும்.

Read More : ’25 வருஷமா தொழில் பண்றோம்’..!! ’இதுவே முதல்முறை’..!! லட்டு விவகாரத்தில் பதறியடித்து விளக்கம் கொடுத்த நிறுவனம்..!!

English Summary

Gas cylinders used at home also have an expiry date. Experts from the sector say that there is a risk of explosion if this outdated cylinder is used.

Chella

Next Post

சூப்பர் வாய்ப்பு...! வேலை இல்லாத நபர்களுக்கு... இன்று காலை 10 மணி முதல்...! மிஸ் பண்ணிடாதீங்க...

Sat Sep 21 , 2024
An employment camp is going to be held today in Kanchipuram district.

You May Like