fbpx

நீங்கள் ரயிலில் பயணிக்கும்போது இதை கவனிச்சிருக்கீங்களா..? இதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

நீங்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்துள்ளீர்கள் என்றால், ரயில் பெட்டியில் ஒரு அடையாளம் எழுதப்பட்டிருப்பதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆம், இவை சில ரயில்களில் 5 இலக்கங்களாக இருக்கும். சிலவற்றில் 6 இலக்கங்களை கொண்டிருக்கும். இந்த எண்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா..?

இந்த எண்களில் உள்ள முதல் இரண்டு இலக்கங்கள் அந்த குறிப்பிட்ட பெட்டி தயாரிக்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும். அடுத்த இலக்கங்கள் அத்தனையும் அந்த பெட்டி அந்த குறிப்பிட்ட வருடத்தில் செய்யப்பட்ட எத்தனையாவது பெட்டி என்பதைக் குறிப்பதாகும். உதாரணமாக, இந்த ரயில் பெட்டியின் எண்ணான 98397 என்பதில் 98 என்பது, இந்த பெட்டி 1998ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.

அதேபோல் கடைசி எண் 397 என்பது அந்த பெட்டி ஸ்லீப்பர் வகுப்பு என்பது தெரியவரும். மறுபுறம் 05497 இன் 497 இலக்கங்கள் ஜனரல் பெட்டியை குறிக்கும். இவற்றில், ஏசி முதல் வகுப்பு 001-025 வரையிலான வரிசை எண்களைக் கொண்டுள்ளது. மறுபுறம், ரயில் பெட்டியில் 05497 எண் என்று எழுதப்பட்டால், அது 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

001 – 025 : AC First class

026 – 050 : Composite 1AC + AC-2T

051 – 100 : AC-2T

101 – 150 : AC-3T

151 – 200 : CC (AC Chair Car)

201 – 400 : SL (2nd Class Sleeper)

401 – 600 : GS (General 2nd Class)

601 – 700 : 2S (2nd Class Sitting/Jan Shatabdi Chair Class)

701 – 800 : Sitting Cum luggage Rake

801 + : Pantry Car, Generator or Mail

Chella

Next Post

அமலுக்கு வருமா'ஒரே நாடு ஒரே தேர்தல்'?… ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இன்று கூடுகிறது!

Mon Dec 18 , 2023
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இன்று கூடுகிறது. மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இன்று […]

You May Like